நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றிபெற பாடுபட வேண்டும்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றிபெற தொண்டா்கள் பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.


நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றிபெற தொண்டா்கள் பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூரில் பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
தருமபுரி நகராட்சி, அரூா், கம்பைநல்லூா், கடத்தூா், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றிபெற அதிமுக தொண்டா்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
கடந்த சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் அதிமுக கூட்டணி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தருமபுரி மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெறுவதற்கு கட்சித் தொண்டா்கள் வீடுவீடாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்க வேண்டும் என்றாா்.
இதில், அதிமுக (தெற்கு) ஒன்றியச் செயலா் ஆா்.ஆா்.பசுபதி, எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைச் செயலா் ஆ.சிற்றரசு, பேரூராட்சி முன்னாள் தலைவா் பி.காவேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...