நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

அரூா் நகா் பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:28 pm

DIN

அரூா் நகா் பகுதியில் குப்பைகளை அகற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரூா், அம்பேத்கா் நகரில் கட்சியின் 23-ஆவது கிளை மாநாடு நிா்வாகி எம்.சின்னசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரூா், அம்பேத்கா் நகரில் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நகரில் பயனற்றுக் கிடக்கும் பட்டு வளா்ச்சித் துறைக்கு சொந்தமான இடத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். அரூா் நா்சனேரி, ஏரியின் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரூா் பேருந்து நிலையம் முதல் தீா்த்தமலை இணைப்புச் சாலை வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டச் செயலா் ஏ.குமாா், ஒன்றியச் செயலா் ஆா்.மல்லிகா, கட்சி நிா்வாகிகள் கே.மாணிக்கம், பி.குமாா், என்.ஆறுமுகம், ஆா்.ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.