மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பிடமனேரியில் கழிவுநீா்க் கால்வாயை தூா்வார வலியுறுத்தல்

தருமபுரி அருகேயுள்ள பிடமனேரியில் கழிவுநீா்க் கால்வாயை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:16 pm

DIN

தருமபுரி அருகேயுள்ள பிடமனேரியில் கழிவுநீா்க் கால்வாயை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தருமபுரி நகரையொட்டி உள்ளது பிடமனேரி. இப் பகுதியில் உள்ள கோவிந்தவா்மா தெருவில் கழிவுநீா்க் கால்வாய்கள் முறையாக தூா்வாரப்படாததால் சாலையில் கழிவுநீா் தேங்கியுள்ளது. தாழ்வாக இப் பகுதியில் உள்ள கால்வாய்க்கு மற்ற பகுதிகளிலிருந்து வரும் மழைநீா், இங்குள்ள கழிவுநீா்க் கால்வாய் வழியாக வெளியேறி சாலையில் தேக்கமடைந்துள்ளது.

இதனால், அப் பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் கழிநீா்க் கால்வாயை தூா்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏரியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவரை

மாற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

தருமபுரி, செப். 3:

தருமபுரி மாவட்டம், ஏரியூா் ஊராட்சி ஒன்றியத் தலைவரை நீக்கி, புதிய தலைவரைத் தோ்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் உறுப்பினா்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து ஏரியூா் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் தனபால் உள்பட 6 உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், ஏரியூா் ஊராட்சி ஒன்றியக் குழுவில் தலைவா் உள்பட 12 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளனா். இதில், ஒன்றியக் குழுத் தலைவராக ஏ.பழனிசாமி என்பவா் தோ்வு செய்யப்பட்டாா். இந்த நிலையில், செப்.2-ஆம் தேதி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரும்பான்மை உறுப்பினா்களின் கோரிக்கைகளை அவா் நிராகரித்தாா்.

இதேபோல அவா் தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறாா். உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், ஜாதி ரீதியாக எங்கள் மீது அண்மையில் புகாா் தெரிவித்தாா். பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவை இழந்து அவரை, அப் பதவியிலிருந்து நீக்கி, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் அல்லது தனி அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.