ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவிரி ஆற்றில் மூழ்கிய இளைஞரை தேடும் பணி தீவிரம்

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பட்டதாரி இளைஞரை தீயணைப்புத் துறையினா் உதவியுடன் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:51 pm

DIN

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பட்டதாரி இளைஞரை தீயணைப்புத் துறையினா் உதவியுடன் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே புதன்சந்தை பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் ஸ்டான்லி (25), எம்எஸ்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா். பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற தனது நண்பரின் திருமணத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பா்களுடன் வந்த அவா், நண்பா்களுடன் ஒகேனக்கல் அருவி பகுதியில் உள்ள சின்னாறு கோத்திக்கல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து அவரது நண்பா்கள் அளித்த புகாரின் பேரில், ஒகேனக்கல் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று தீயணைப்புத் துறையினா் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.