மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் செப். 15-இல் மனிதச் சங்கிலி போராட்டம்

 உபா சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, செப். 15-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:52 pm

DIN

 உபா சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, செப். 15-ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் செங்கொடிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.மாதையன், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டத் தலைவா் ஏ.ஜெயா ஆகியோா் பேசினா்.

இக்கூட்டத்தில், பீமாகோரேகான் சதி வழக்கில் சிறைபடுத்தப்பட்டோா் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உபா சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப். 15 அன்று தருமபுரி, நேதாஜி புறவழிச் சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.