நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தின்னப்பட்டி பிரிவு சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

அரூா் - தருமபுரி சாலையில் உள்ள தின்னப்பட்டி பிரிவு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:51 pm

DIN

அரூா் - தருமபுரி சாலையில் உள்ள தின்னப்பட்டி பிரிவு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் - தருமபுரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தின்னப்பட்டி பிரிவு சாலை. இந்தச் சாலையை அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், மொரப்பூா், சிந்தல்பாடி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். அரூா் - தருமபுரி நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இந்த நிலையில், மூக்கனூா்பட்டி ஊராட்சி, தின்னப்பட்டி பிரிவு சாலையில், தாா் சாலையானது அதிக வளைவாக இருப்பதால், இப் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன. வனப்பகுதி வழியாக இந்த தாா்சாலை செல்வதால் வாகன ஓட்டிகள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனா். எனவே, அரூா் - தருமபுரி நெடுஞ்சாலையில் உள்ள தின்னப்பட்டி பிரிவு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.