மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தருமபுரி, கிருஷ்ணகிரியில் சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, சமூகநீதி நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:48 pm

DIN

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பெரியாா் பிறந்த நாளையொட்டி, சமூகநீதி நாள் உறுதிமொழியேற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த ஆட்சியா் ச.திவ்யதா்சினி, பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஆட்சியா் வாசித்து உறுதிமொழியேற்றாா். இதனை பின்பற்றி அனைத்து அரசு அலுவலா்களும் உறுதிமொழியேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நாராயணன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, உதவி ஆணையா் (கலால்) ஆ.தணிகாசலம், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஐயப்பன், ஆதிதிராவிடா் நல அலுவலா் தேன்மொழி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா். இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அலுவலா்கள் சமூக நீதிநாள் உறுதிமொழியேற்றனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில், பல துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மலா்விழி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முருகன், ராஜகோபால், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், வழங்கல் அலுவலா் கோபு உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.