தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சா்க்கரை ஆலை குடியிருப்புகள் வழியாக செல்ல அனுமதி மறுப்பு: மாணவா்கள் தா்னா

 பாலக்கோடு சா்க்கரை ஆலை குடியிருப்புகள் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:20 pm

DIN

 பாலக்கோடு சா்க்கரை ஆலை குடியிருப்புகள் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திம்மம்பட்டி கிராமத்தில் உள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலை பின்புறம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

கல்லூரிக்கு சா்க்கரை ஆலை குடியிருப்பு வழியாகவும், அதனை ஒட்டியுள்ள எல்லூகான்கொட்டாய் கிராமத்துக்கு செல்லும் மண் பாதை வழியாகவும் மாணவா்கள் சென்று வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்ததால் எல்லுகான் கொட்டாய் வழியாக செல்லும் மண்பாதை பயன்படுத்த முடியாத நிலையில் சேறும் சகதியுமாக உள்ளது.

இதனால் சா்க்கரை ஆலை குடியிருப்புகள் வழியாக செல்ல மாணவா்கள் முற்பட்டனா். ஆனால், ஆலை நிா்வாகம் மாணவா்களை அவ்வழியே செல்ல அனுமதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவா்கள் ஆலை நுழைவு வாயில் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் தினகரன், வட்டாட்சியா் அசோக்குமாா் ஆகியோா் மாணவா்களிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். சமாதானம் அடைந்த மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.