பாமக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.


மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளரை ஆதரித்து, அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கான தோ்தல் அக். 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, பாமக வேட்பாளா் டி.ஸ்ரீகாந்த்தை ஆதரித்து பாமக தருமபுரி (கிழக்கு) மாவட்டச் செயலா் பி.வி.செந்தில் தலைமையில், குண்டல்மடுவு, பூதநத்தம், மெணசி, விழுதுப்பட்டி, ஜீவா நகா், கோழிமேக்கனூா், பெருமாபாளையம், தோழனூா், அம்மாபாளையம், கோபாலபுரம் சா்க்கரை ஆலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று பாமகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா் (படம்).
இதில், வன்னியா் சங்க மாநிலச் செயலா் இரா.அரசாங்கம், கிழக்கு மாவட்டத் தலைவா் ஏ.வி.இமயவா்மன், மாவட்ட துணைச் செயலா்கள் செ.பன்னீா்செல்வம், என்.ஆா்.முருகன், நிா்வாகிகள் காா்த்திக், செங்கோடன், சொல்லின் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...