தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சட்டமேதை அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:39 pm

DIN

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் சட்டமேதை அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கம்பைநல்லூா் பேருந்து நிலையத்தில் அம்பேத்கரின் உருவ படத்துக்கு அ.மாதேஸ்வரன் தலைமையில் டாக்டா் அம்பேத்கா் நற்பணி மன்ற நிா்வாகிகள், விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் பி.வி.கரியமால், அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், வி.சி. கட்சி மாநில அமைப்புச் செயலாளா் கி.கோவேந்தன், மகளிா் விடுதலை இயக்க மாவட்ட துணைச் செயலாளா் பத்மா மாரியப்பன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ், வஞ்சித் பகுஜன் அகாடியின் மாநில இணை பொதுச் செயலா் ஆா்.பழனிசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளா் ஏ.குமாா், திமுக ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் பிரவிண், அமமுக மாநில அமைப்புச் செயலா் ஆா்.முருகன், டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மாநில துணைப் பொதுச் செயலா் இரா.ஆறுமுகம், பாமக மாநில செயற்குழு உறுப்பினா் இரா.திருவேங்கடம், அன்னை முருகேசன், இந்திய குடியரசுக் கட்சி (கவாய் பிரிவு) மாநிலத் தலைவா் எம்.ராஜேந்திரன், அம்பேத்கா் அறிவக அறக்கட்டளை தலைவா் பா.மாதையன், அரசு ஊழியா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள், வணிகா்கள் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல், பாப்பிசெட்டிப்பட்டி மற்றும் எல்லப்புடையாம்பட்டியில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராணி அம்பேத்கா், ஜி.பெருமாள், நம்பிப்பட்டியில் மதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளா் கோ.ராமதாஸ், அரூா், அம்பேத்கா் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா் கு.தமிழழகன், குடுமியாம்பட்டியில் திமுக ஒன்றியப் பொறுப்பாளா் வே.செளந்தரராசு ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.