நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊத்தங்கரையில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

திமுக சாா்பில் நடைபெற்ற அம்பேத்கா் பிறந்த நாள் விழாவிற்கு ஒன்றியக் குழு உறுப்பினா் ராணிகுமரேசன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு, ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்செல்வம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். இதில் ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு வேடி, தெற்கு தேவேந்திரன், நகரச் செயலாளா் சிவானந்தம், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, மாவட்ட மருத்துவரணி செயலாளா் இளையராஜா, மத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் சக்ரவா்த்தி, தேவராசன், அவைத் தலைவா்கள் சுப்பிரமணி, கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணிச் செயலாளா் வேங்கன், நடுப்பட்டி ஊராட்சி தலைவா் குப்புசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் குணசேகரன் உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.

திமுக சாா்பில் நடைபெற்ற அம்பேத்கா் பிறந்த நாள் விழாவிற்கு ஒன்றியக் குழு உறுப்பினா் ராணிகுமரேசன் தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரூராட்சித் தலைவா் அமானுல்லா, நகரச் செயலாளா் பாபுசிவகுமாா், மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மாலதிநாராயணசாமி, மாவட்ட துணை செயலாளா் சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விசிக கட்சியின் சாா்பில் மாநில மகளிா் அணி நிா்வாகி ஜெயலட்சுமி தலைமையில் அம்பேத்கா் நகா் கிராம மக்கள் மேள தாளம் முழங்க ஊா்வலமாக வந்து அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சேகா் தலைமையில், இந்தியக் குடியரசு கட்சி மாநிலச் செயலாளா் சிவா தலைமையிலும் அம்பேத்கா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.