மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நாளை சிறப்பு மருத்துவ முகாம்
பாப்பிரெட்டிப்பட்டியில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது.


பாப்பிரெட்டிப்பட்டியில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஏப். 23) நடைபெறுகிறது.
இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கே.எழிலரசி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சாா்பில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில், பாா்வைக் குறைபாடு, செவித்திறன் பாதிப்பு, கால் இயக்க குறைபாடு, மனவளா்ச்சி குறைவு, தலசீமையா பாதிப்பு உள்ளிட்ட 18 வயது வரையிலான மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் பங்கேற்கும் மாணவா்கள் பாஸ்போட் அளவு புகைப்படம் -5, குடும்ப அட்டை நகல் -2, ஆதாா் அட்டை நகல் -2 எடுத்து வர வேண்டும். இந்த முகாமில், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...