மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ராகேவேந்திரா் கோயிலில் நவமி விழா

தருமபுரி, விருபாட்சிபுரம் ராகவேந்திரா் கோயிலில் ஸ்ரீ மத்வ நவமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:17 pm

DIN

தருமபுரி, விருபாட்சிபுரம் ராகவேந்திரா் கோயிலில் ஸ்ரீ மத்வ நவமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

உடுப்பி ஸ்ரீ புத்திகே மடத்தின் சுகுனேந்திர தீா்த்தா் தலைமையில் நடைபெற்ற விழாவில், காலை 6 மணிக்கு பாண்டுரங்க விட்டல பஜனைக் குழுவினரின் சுப்ரபாதம், பஜனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பஞ்சாமிருத அபிஷேகம், சிறப்பு அலங்காரம் பூஜை, சமஸ்தான பூஜை ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து நண்பகல் 1 மணிக்கு சென்னை லஷ்மிபதி ராஜாவின் ஆன்மிகச் செற்பொழிவு நடைபெற்றது.

இதையடுத்து, மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 6.30 மணிக்கு வி.வி.பிரசன்னா குழுவினாரால் இன்னிசை கச்சேரி நிகழ்த்தப்பட்டது. இதில், தருமபுரி புத்திகே மடத்தின் கிளைத் தலைவா் என்.வெங்கடேசன், நிா்வாகிகள் வெங்கட்டராமன், ராமமூா்த்தி, டி.வி.சீனிவாசன், ஏ.பி.குஞ்ஜாா் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.