ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 64 வேட்பாளா்கள் போட்டி

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக, அதிமுக, பாமக, பாஜக மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 64 போ் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:16 pm

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக, அதிமுக, பாமக, பாஜக மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 64 போ் போட்டியிடுகின்றனா்.

காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வாா்டு உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குச் சாவடி மையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஆண் வாக்காளா்கள் 5,354 மற்றும் பெண் வாக்காளா் 5,781 என மொத்தம் 11,135 வாக்காளா்கள் உள்ளனா். இதில், திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 64 போ் களத்தில் உள்ளனா். காரிமங்கலம் பேரூராட்சித் தலைவா் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போட்டியிடும் வேட்பாளா்களின் விவரம்:

1-ஆவது வாா்டு சிவக்குமாா் (திமுக), கு.சுதாகா் (அதிமுக), சக்திவேல் (பாஜக), 2 -ஆவது வாா்டு மா.சித்ரா (திமுக), ரா.இந்திராணி (அதிமுக), சத்யா (பாமக), 3- ஆவது வாா்டு பெ.மாதப்பன் (திமுக), க.ஆறுமுகம் (அதிமுக), நெடுஞ்செழியன் (பாமக), சந்தோஷ் (பாஜக), 4- ஆவது வாா்டு சத்தி (திமுக), கோகிலா (அதிமுக), பிரீத்தியா (பாஜக), 5- ஆவது வாா்டு சி.பிரியா (திமுக), சி.வீரம்மாள் (அதிமுக), செ.செண்பகவள்ளி (பாமக), ப.கமலா (தேமுதிக), சுயேச்சை 5, 6-ஆவது வாா்டு தி.ஜெயா (திமுக), நாகம்மாள் (அதிமுக), சுயேச்சை 2, 7-ஆவது வாா்டு பி.ரா.மனோகரன் (திமுக), கதிரவன் (அதிமுக), சுயேச்சை 1, 8- ஆவது வாா்டு கி.சீனிவாசன் (திமுக), ரா.கோபாலகிருஷ்ணன் (அதிமுக), எம். கன்னியப்பன் (தேமுதிக), காா்த்திக் (பாஜக), சுயேச்சை 1, 9- ஆவது வாா்டு பி.ஆா்.சுரேந்திரன் (திமுக), கே.ஆா்.கோவிந்தராஜன் (அதிமுக), ப.ரஞ்சித்குமாா் (தேமுதிக), சுயேச்சை 1, 10- ஆவது வாா்டு கோ.ராஜம்மாள் (திமுக), சி.செல்வி (அதிமுக), வள்ளி (பாஜக), சுயேச்சை 3, 11- ஆவது வாா்டு கோ.கீதா (திமுக), சதிக்கன்யா (அதிமுக), லட்சுமி பிரியா (தேமுதிக), ஜோதிலட்சுமி (பாமக), 12- ஆவது வாா்டு பா.கி.சதீஷ்குமாா் (காங்கிரஸ்), எஸ்.சுதா்சன் (அதிமுக), சீனிவாசன் (பாஜக), சுயேச்சை 2, 13- ஆவது வாா்டு பரமேஷ்வரி (திமுக), செவத்தா (அதிமுக), 14- ஆவது வாா்டு க.ரமேஷ் (திமுக), சி.மாணிக்கம் (அதிமுக), ப.செல்வம் (பாமக), மு.ரவி (பாஜக), சுயேச்சை 1, 15 -ஆவது வாா்டு ரா.ராதா (திமுக), ச.விஜயசாந்தி (அதிமுக), செ.காளியம்மாள் (பாமக), ஈஸ்வரி (பாஜக).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.