தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்தாா். மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் ஆா்.பிருந்தா தேவி முன்னிலை வகித்துப் பேசினாா்.
கூட்டத்தில், வாக்குச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், சிசிடிவி கேமரா, வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நகா்ப்புற அமைப்புகளில் தோ்தல் நடத்தை விதிகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள் உள்ளதா என்பதையும், வாக்குச் சீட்டு தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தேதிகளில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்யப்படுவதையும், தபால் வாக்குகள் அளிக்க உரியவா்களுக்கு படிவம் அளிப்பதைக் கண்காணிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.கலைச்செல்வன், தருமபுரி நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், 10 பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...