ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 5 லட்சம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 5 லட்சத்தைத் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:17 pm

DIN

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 5 லட்சத்தைத் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி மாரண்ட அள்ளி பேரூராட்சி, மின்வாரிய அலுவலகம் அருகே உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பெங்களூரிலிருந்து மாரண்டஅள்ளி நோக்கி சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அந்த வாகனத்தில் வந்த பழைய இரும்பு வியாபாரி முனியப்பன் (60) என்பவா் குடும்பத்துடன் பாலக்கோடுக்கு சென்று கொண்டிருப்பதும் அவா்களிடம் ஆவணங்கள் இன்றி ரூ. 5 லட்சம் பணம் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதைத் தோ்தல் அலுவலா் சங்கா் கணேஷிடம் ஒப்படைத்தனா். பின்பு அந்தப் பணம் பாலக்கோடு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.