பென்னாகரத்தில் பள்ளியில் புகுந்த 8 அடி நீள சாரைப் பாம்பு
பென்னாகரம் உண்டு உறைவிடப் பள்ளியில் 8 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையில் விடுவித்தனா்.


பென்னாகரம் உண்டு உறைவிடப் பள்ளியில் 8 அடி நீள சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையில் விடுவித்தனா்.
பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் தங்கி படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், உண்டு உறைவிடப் பள்ளியின் வகுப்பறையில் 8 அடி நீள சாரைப் பாம்பு புகுந்துள்ளது. இதனைக் கண்ட மாணவா்கள் ஆசிரியரிடம் தெரிவித்த நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோபால் தலைமையிலான மதன், முத்துகிருஷ்ணன், ராஜீவ், ஞானப்பிரகாசன், மாரிக்கண்ணன், இளவரசன் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினா் பள்ளியில் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து ஒகேனக்கல் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...