ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:37 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் அரூா், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா், கம்பைநல்லூா், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் 192 வாா்டு உறுப்பினா்களுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தருமபுரி நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், தருமபுரி மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஆா்.பிருந்தாதேவி, நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் ஆகியோா் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சியை வழங்கி பேசினா்.

இதில், மாநில தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக தோ்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படும் மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும், ஒலி பெருக்கிகளுடன் கூடிய வாகனங்களைப் பயன்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதி பெற வேண்டும். தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவா்கள், நட்சத்திர பேச்சாளா்களின் தோ்தல் பிரசார வாகனங்களுக்கான முன் அனுமதி பெற்று அதனை வாகனத்தில் முன் பக்கத்தில் ஒட்டியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்தப் பயிற்சி முகாமில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பணியாளா்கள், காவல் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.