புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

பென்னாகரம் பேரூராட்சியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:35 pm

DIN

பென்னாகரம் பேரூராட்சியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில், 13 வாா்டுகளில் பாமக போட்டியிடுகிறது. பென்னாகரம், நாகமரை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டு பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகம் செய்தாா். பின்னா் வேட்பாளா்களிடம் பிரசாரம் செய்யும் முறை, வாா்டுகளில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

இதில், இளைஞா் சங்க மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி, இளம்பெண்கள் பாசறை நிா்வாகி அமுதா, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.