தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜக கோரிக்கை

அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:41 pm

DIN

அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக இளைஞரணி மாவட்ட செயலா் கே.தினகரன், மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

தருமபுரி மாவட்டம், அரூா் - சிட்லிங் நெடுஞ்சாலையை கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, பையா்நாய்க்கன்பட்டி, எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த வழித்தடத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், லாரிகள், காா்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் வந்து செல்கின்றன.

சிட்லிங் சாலையோரத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு பாதிப்பும், அடிக்கடி வாகன விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, சிட்லிங்கில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.