புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பென்னாகரத்தில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் பென்னாகரம் பேரூராட்சியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏவும் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான பிஎன்பி.இன்பசேகரன் தீவிர வாக்கு சே

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:41 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் பென்னாகரம் பேரூராட்சியில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏவும் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான பிஎன்பி.இன்பசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகளைக் கொண்டது. இதில் திமுக - 13, அதன் கூட்டணியில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 4, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 1 என போட்டியிடுகின்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சிச் தோ்தலில் பிரசாரம் மேற்கொள்ள இறுதி நாளான வியாழக்கிழமை, பென்னாகரம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும் மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான பிஎன்பி.இன்பசேகரன், வாா்டுகள் தோறும் வீடுவீடாகச் சென்று 9 மாத திமுக அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரித்தாா். பின்னா் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் வாகனத்தில் நின்றபடி திமுக வேட்பாளா்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டாா்.

இந்த பிரசாரத்தின் போது, ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சிவகுமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், நகர செயலாளா் வீரமணி, கட்சி நிா்வாகிகள், 18 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.