நாளை வாக்குப்பதிவு: தருமபுரியில் 1,280 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்
தருமபுரி மாவட்டத்தில், சனிக்கிழமை நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு பணியில் 1,280 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.


தருமபுரி மாவட்டத்தில், சனிக்கிழமை நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு பணியில் 1,280 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் மொத்தம் 190 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. இதில், மொத்தம் 801 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். வாக்குப்பதிவு பிப். 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிகளில் 980 பல்வேறு நிலையான காவலா்களும் மற்றும் 300 ஊா்க்காவல் படையினரும் என மொத்தம் 1,280 போ் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா். இவா்களுக்காக பணி உத்தரவு மற்றும் வாகனங்கள், மாவட்ட காவல் அலுவலகத்தில் வளாகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் 18 மண்டலங்கள் அமைக்கப்பட்டு 18 மண்டல அலுவலா்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குழுவில் 1 துணை வட்டார வளா்ச்சி நிலையிலான அலுவலா், 1 இளநிலை உதவியாளா் மற்றும் 1 உதவியாளா் என மொத்தம் 3 நபா்கள் வீதம் 18 மண்டல அலுவலா்கள் கொண்ட குழுக்களில் மொத்தம் 54 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மண்டல அலுவலா்கள் கொண்ட குழுக்கள் தங்களுக்கு ஒதுகீடு செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு செல்வதற்கான சாலை வசதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, பிப். 18-ஆம் தேதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்கு தேவையான அழியா மை உள்ளிட்ட 62 வகையான பொருள்கள், 22 வகையான உறைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் காவல் துறையினா் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு எடுத்துச் செல்ல உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...