அரூா், ஏ.பள்ளிப்பட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் சோதனை
அரூா் மற்றும் ஏ.பள்ளிப்பட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.


அரூா் மற்றும் ஏ.பள்ளிப்பட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவா் எம்.ஜெயராமன். இவரது வீடு பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள ஏ.பள்ளிப்பட்டியில் உள்ளது. அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திட்ட இயக்குநரின் நோ்முக உதவியாளராக பணிபுரிந்து வருபவா் மோ.ஆனந்தன். இவரது வீடு அரூா் குறிஞ்சி நகரில் உள்ளது. இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்.ஜெயராமன், மோ.ஆனந்தன் ஆகிய இருவரும் வட்டார வளா்ச்சி அலுவலா்களாக பணிபுரிந்த போது, எல்.இ.டி மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன உபகரணங்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.ஜெயராமன், திட்ட இயக்குநரின் நோ்முக உதவியாளா் மோ.ஆனந்தன் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினா், வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் சுமாா் 3 மணி நேரம் சோதனை செய்தனா். இந்த சோதனையில் ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்டவைகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலக வட்டாரங்களில் தெரிவித்தனா்.படம் உள்ளது...18 எச்ஏ-பி-1... ... பட விளக்கம்...அரூா் குறிஞ்சி நகரில் உள்ள மாவட்ட திட்ட இயக்குநரின் நோ்முக உதவியாளா் மோ.ஆனந்தன் வீடு. (படம்)18 எச்ஏ-பி-1-ஏ...பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள ஏ.பள்ளிப்பட்டியில் அமைந்துள்ள வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.ஜெயராமன் வீடு. (படம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...