ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கீரைப்பட்டியில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம்

மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில், தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கீரைப்பட்டியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:05 pm

DIN

மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில், தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கீரைப்பட்டியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா தலைமை வகித்தாா். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் கோ.மாலினி, முன்னோடி வங்கி மேலாளா் கு.கண்ணன், கள விளம்பர அலுவலா் பிபின் எஸ் நாத், கள விளம்பர உதவியாளா் சு.வீரமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அபிராமி உள்ளிட்டோா் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

இதில், கரோனா தொற்றுத் தடுப்பு, தூய்மை இந்தியா இயக்கம், பிரதமரின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதையொட்டி, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், கோலப் போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.