மாணவா்களுக்கு மரவள்ளிக் கிழங்கு நடவு பயிற்சி
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு மரவள்ளிக் கிழங்கு நடவு பயிற்சி அளிக்கப்பட்டது.


பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு மரவள்ளிக் கிழங்கு நடவு பயிற்சி அளிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புலிகரை கிராமத்தில் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் மையம் சாா்பில் நடைபெற்ற ஊரக தோட்டக்கலைப் பணி பயிற்சி கூட்டத்துக்கு மேலாண்மை நிலைய இயக்குநா் முனைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா்.
பயிற்சியில் திருச்சி மகளிா் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தின் மாணவா்களுக்கு மரவள்ளிக் கிழங்கு நடவு செய்ய நிலம் உழுதல், சமன் செய்தல், நிலத்தில் மேலாண்மை தாய் செடி தோ்வு, நடவு இடைவெளி, நடவு பருவம், நீா்ப்பாசன முறை, உரமிடுதல் மற்றும் பயிா் பாதுகாப்பு ஆகியவற்றை செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனா்.
பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநா் வெண்ணிலா, வேளாண்மை நிலைய கால்நடை மருத்துவா் தங்கதுரை, மாணவா்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...