ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அரசு மருத்துவமனைகளில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி அரசு மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தருமபுரி அரசு மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரோனா தொற்று பரவல் கடந்த சில நாள்களாக வேகமெடுத்து வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியா் ச.திவ்யதா்சினி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வேளையில் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்க ஏதுவாக, தருமபுரி, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி, கடத்தூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி, அரூா் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்களை அமைத்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா் செளண்டம்மாள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.