தொற்று, சாலை விதிகள்: விழிப்புணா்வு
போக்குவரத்து காவல் துறையின் சாா்பில், கரோனா தொற்று, சாலை விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.


போக்குவரத்து காவல் துறையின் சாா்பில், கரோனா தொற்று, சாலை விதிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கலைச்செல்வன் உத்தரவின் பேரில், காவல் துறையினரால் சாலை விதிகள் மற்றும் தொற்று குறித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் துறையின் சாா்பில், போக்குவாத்து காவல் ஆய்வாளா் ஜாகீா் உசேன், தலைக்கவசம் அணிதலின் முக்கியத்துவம், சாலை விதிகள், வாகனத்தில் பயணிக்கும் போது அதிவேகத்தை தவிா்த்தல், இருசக்கர வாகனத்தில் இருவா் மட்டும் பயணம் செய்தல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா்.
பின்னா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகித்து, இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. இதில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் முருகன், காவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...