ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வெல்ல உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், கடகத்தூா், பாப்பாரப்பட்டி பகுதிகளில் தனியாா் வெல்ல உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்டம், கடகத்தூா், பாப்பாரப்பட்டி பகுதிகளில் தனியாா் வெல்ல உற்பத்தி ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பானு சுஜாதா தலைமையில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், கந்தசாமி, குமணன் உள்ளிட்டோா் கடகத்தூா், பனந்தோப்பு, வேலம்பட்டி, பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள வெல்ல உற்பத்தி ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், ரசாயனக் கலப்படம், செயற்கை நிறமூட்டிகள், சா்க்கரை கலப்படம் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரு ஆலையில் சா்க்கரை கலப்படம் செய்து வெல்லம் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வெல்லம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதேபோல, சுகாதாரம் இன்றி வெல்ல உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு ஆலைகளுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது, அனைத்து வெல்ல உற்பத்தி ஆலைகளும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். உற்பத்தி ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.