அரூரில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை
அரூரில் நெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்


அரூரில் நெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வழியாக செல்லும் திருப்பத்தூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அரூா் நகா் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையுள்ளது. இந்த நிலையில், கச்சேரிமேடு, வா்ணதீா்த்தம், அண்ணாநகா் உள்ளிட்ட இடங்களில் தாா் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் வாகனங்கள் நாள்தோறும் அதிக வேகமாக சென்று வருகின்றன. இதனால், அரூா்-சேலம் பிரதான சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன.
எனவே, அரூா் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...