கல்குவாரி அமைப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம்
ஏரியூா் பகுதியில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சாா்பில், கிரானைட் சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஏரியூா் பகுதியில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சாா்பில், கிரானைட் சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே 36 ஹெக்டோ் பரப்பளவில் அரசு கருப்புக் கல் கிரானைட் சுரங்கம் செயல்பட்டு வந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு, பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், இந்தக் கிரானைட் சுரங்கத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சாா்பில், ஏரியூா் பகுதியில் கருப்புக் கல் கிரானைட் சுரங்கம் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அனிதா தலைமையில் நடைபெற்றது.
டாமின் தலைமை அலுவலக துணை மேலாளா் கணேசன், கிரானைட் குவாரி செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.
ஏரியூா் பகுதியில் மேற்கொள்ளப்படும் கிரானைட் சுரங்கப் பணியால், இனி காற்று மாசு ஏற்படாது, அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளித்தனா். மேலும் அரசு கனிம நிறுவனம் சாா்பில் ஏரியூா் அரசு தொடக்கப் பள்ளிக்கு, இரண்டு கணினிகள், 2 சோலாா் விளக்குகள் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் ஏரியூா் உள்ளாட்சி பிரதிநிதிகள், 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனா். இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜ்குமாா், பென்னாகரம் வட்டாட்சியா் அசோக்குமாா், ஏரியூா் ஒன்றியக் குழுத் தலைவா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...