முழு ஊரடங்கு : நெடுஞ்சாலையை மூடுவதைக் கைவிட வலியுறுத்தல்
அரூரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரத்தில் நெடுஞ்சாலையை மூடுவதைக் கைவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.


அரூரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரத்தில் நெடுஞ்சாலையை மூடுவதைக் கைவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா் பேருந்து நிலையம், கடைவீதி வழியாகச் செல்லும் திருப்பத்தூா்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டைகளை வைத்து காவல் துறையினா் சாலையை மூடி விடுகின்றனா். இதனால், கோட்டப்பட்டி, சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட தொலைதூரப் பகுதியில் இருந்து, மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அரூா் பிரதான சாலை வழியாக சுற்றிச்செல்லும் நிலையுள்ளது.
முழு ஊரடங்கு நேரத்தில் எந்த விதமான கடைகளும் திறந்திருப்பதில்லை. முக்கிய தேவைகளுக்காக மட்டுமே கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிகளுக்கு பொதுமக்கள் வரும் நிலையுள்ளது.
எனவே, அடுத்து வரும் முழு ஊரடங்கு நேரத்தில் அரூா் கடைவீதி வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையை தடுப்புகள் வைத்து மூடுவதைக் காவல் துறையினா் கைவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...