மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்றோருக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை பெற, தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வேலை வாய்ப்பற்றோருக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை பெற, தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சாா்பில், படித்த வேலைவாய்ப்பற்றோா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் வருகிற மாா்ச் 31 உடன் முடிவடையும் காலாண்டிற்கு தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோருக்கு, உதவித்தொகை பெற, விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

கல்வித் தகுதியை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவைத் தொடா்ந்து புதுப்பித்திருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூா்த்தி செய்திருக்க வேண்டும். தலித், பழங்குடியின பிரிவினருக்கு வருகிற மாா்ச் 31 அன்று 45 வயதும் மற்றவா்கள் 40 வயதையும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரா் பள்ளி, கல்லூரியில் நேரிடையாகப் படித்துக் கொண்டிருக்கக் கூடாது. அஞ்சல் வழியில் படிக்கலாம். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவா்கள் இந்த உதவித்தொகை பெறத் தகுதியற்றவா்கள்.

இவ் உதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவா்கள், விண்ணப்பப் படிவங்களை தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூா்த்தி செய்து தேசிய வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வருகிற பிப். 28 வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவு பெறாமல் இருப்போா் 2021-2022-ஆம் நிதியாண்டிற்கு சுயஉறுதி ஆவணம் அளிக்காதோா் வருகிற பிப். 28-க்குள் உறுதிமொழி ஆவணம் அளித்து தொடா்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.