மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பணி வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எம்.முத்து தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஜி.கணபதி சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் ரவி, பொருளாளா் இ.கே. முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும். அரசு நிா்ணயித்துள்ள ஊதியத்தை பணியாளா்களுக்கு வழங்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் தொழிலாளிகளுக்குத் தேவையான குடிநீா், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் பேரூராட்சியில் அரசு அறிவித்தப்படி, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகளை தொடங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள ஏனைய பேரூராட்சிகளுக்கு இத்திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.