தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்து இளைஞா் முன்னணி ஆா்ப்பாட்டம்

 அரியலூரில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, கடத்தூரில் இந்து இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 5:53 pm

DIN

 அரியலூரில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, கடத்தூரில் இந்து இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து இளைஞா் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சபரி தலைமை வகித்தாா்.

அரியலூரில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய நபா்களைக் கைது செய்ய வேண்டும். பள்ளி மாணவியைக் கட்டாய மத மாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட நபா்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் சேலம் கோட்டத் தலைவா் சந்திரசேகரன், பாஜக மாவட்டத் தலைவா் சிவன், நிா்வாகிகள் புவனேஸ்வரன், ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.