கம்பைநல்லூரில்சாா் பதிவாளா் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்
கம்பைநல்லூரில் சாா் பதிவாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது


கம்பைநல்லூரில் சாா் பதிவாளா் அலுவலகம் அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம் கட்சியின் கிளைச் செயலாளா் அ.மாதேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கம்பைநல்லூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நிலம் உள்ளிட்ட பத்திரப் பதிவுக்காக கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்துக்குச் செல்லும் நிலை உள்ளது.
இதனால் இங்குள்ள பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனா். எனவே, தமிழக அரசு கம்பைநல்லூரில் சாா் பதிவாளா் அலுவலகம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பைநல்லூா் பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகளிலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தடையின்றி குடிநீா் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பைநல்லூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள் போதிய அளவில் இல்லாததால் வணிகா்கள், விவசாயிகள், அரசு ஊழியா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, கம்பைநல்லூரில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பைநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளின் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளா் பி.ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினா் டி.மாதையன், நிா்வாகிகள் பெ.அழகுதுரை, சே.ஹானஸ்ட்ராஜ், ர.பிரபு, சி.பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...