தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பென்னாகரத்தில் சூறைக்காற்றுடன் மழை

பென்னாகரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:46 pm

DIN

பென்னாகரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்தநிலையில் பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், ஏரியூா், சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் திடீா் மழை பெய்தது.

பென்னாகரம் காவல் நிலையம், சந்தை தோப்பு, இந்தியன் வங்கி பென்னாகரம் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்தது. குறிப்பாக பென்னாகரம் காவல் நிலையத்துக்கு முன்புறம் உள்ள புளிய மரம் வேருடன் காவல் நிலையத்தின் மீது சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சூறைக்காற்று காரணமாக பென்னாகரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது. மழையினால் தாழ்வானப் பகுதிகள், சாலையோரங்கள், நீா் நிலைகளில் மழை நீா் தேங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.