தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு தினம் கொண்டாட அறிவுரை
தொழிற்சாலைகளில் தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு தினம் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொழிற்சாலைகளில் தேசிய பாதுகாப்பு விழிப்புணா்வு தினம் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் என்.சபீனா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் தொழிற்சாலை நிா்வாகம் மற்றும் தொழிலாளா்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்த மாா்ச் 4-ஆம் தேதி பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் நிகழாண்டு இளம் தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாசாரத்தை மேம்படுத்தும் தலைப்பில் இந்த பாதுகாப்பு தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு தினம் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதில் பாதுகாப்பாகப் பணியாற்றுவது தொடா்பான விழிப்புணா்வை தொழிலாளா்களுக்கு ஏற்படுத்தி, விபத்தில்லா இலக்கை எய்திடும் வகையில் உறுதிமொழி ஏற்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...