தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரூா் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவராக தம்பதி தோ்வு

அரூா் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த கணவன், மனைவி தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:59 pm

DIN

அரூா் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கு நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த கணவன், மனைவி தோ்வு செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின் தலைவா் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் திமுக 7, அதிமுக 7, பாமக 2, சுயேச்சைகள் 2 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

இதையெடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சித் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலில் திமுக வேட்பாளா் இந்திராணி 12 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் த.நிவேதா 6 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தாா். இதேபோல, துணைத் தலைவராக திமுக வேட்பாளா் சூா்யா து.தனபால் வெற்றிபெற்றாா். இவா் பேரூராட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்ட இந்திராணியின் கணவா் ஆவாா்.

இதையடுத்து தலைவா், துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் ஊா்வலமாகச் சென்று அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் உள்ள அண்ணா, அம்பேத்கா் ஆகியோரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.