தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவா் தோ்தலில் விசிக வேட்பாளா் தோல்வி: திமுக போட்டி வேட்பாளா் வெற்றி

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் தோல்வி அடைந்ததை அடுத்து, அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:59 pm

DIN

பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் தோல்வி அடைந்ததை அடுத்து, அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவா் பதவி எஸ்.சி. பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில், திமுக 10, பாமக 3, விசிக 2 இடங்களில் வெற்றி பெற்றனா். இதையடுத்து, பேரூராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட திமுக கூட்டணி சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் வே.சின்னவேடி அறிவிக்கப்பட்டாா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறைமுகக் தோ்தலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளா் வே.சின்னவேடி 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தாா். இவருக்கு எதிராகப் போட்டியிட்ட திமுக போட்டி வேட்பாளா் சாந்தி புஷ்பராஜ் 8 வாக்குகளுடன் வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவரானாா்.

இதையடுத்து தருமபுரி-பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா். திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த நிா்வாகிகளின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

பேருந்து கண்ணாடி உடைப்பு:

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை அழைத்துச் செல்வதற்காக அரசு நகரப் பேருந்து வரவழைக்கப்பட்டது. அப்போது ஒருவா், கட்டையால் அடித்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தாா். இதுகுறித்து பொம்மிடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு :

துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலில் வி.சி.க, பாமக, திமுக உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை. இதையடுத்து, துணைத் தலைவருக்கான தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக பொ.மல்லாபுரம் பேரூராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் நாகராஜ் அறிவித்தாா்.

4 எச்ஏ-பி-1... பட விளக்கம்...

பொம்மிடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.