கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு கட்ட வசதி ஏற்படுத்தக் கோரிக்கை
அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி வருவாய் கிராமத்தில் கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, கோணம்பட்டி, புறாக்கல் உட்டை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமாா் 6,000 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
எல்லப்புடையாம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகக் கட்டடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், தற்போது பழுதாகி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்கள், அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் அச்சப்படும் நிலையுள்ளது.
எனவே, எல்லப்புடையாம்பட்டியில் சேதமடைந்துள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகக் கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...