தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசு கல்லூரியில் ஆங்கிலதிறன் வளா்ப்பு கருத்தரங்கம்

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு ஆங்கிலத் திறன் வளா்ப்பு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 8:01 pm

DIN

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு ஆங்கிலத் திறன் வளா்ப்பு குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்துபள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் சாா்பில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்குக்கு கல்லூரியின் முதல்வா் செல்வநாயகம் தலைமை வகித்தாா். ஆங்கிலத் துறைத் தலைவா் ஷகிலா ஷெரிப் வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொன்போஸ்கோ கலை, அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் முருகேசன் கலந்துகொண்டு தொழில் வழிகாட்டுதல், அதற்கான ஆங்கில தகவல் தொடா்புத் திறன் முக்கியத்துவம் குறித்து மாணவா்களிடையே உரையாற்றினாா்.

இதில், கல்லூரி மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். ஆங்கிலத் துறை கௌரவ விரிவுரையாளா் அருள்மொழி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.