போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி முகாம்
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போட்டித் தோ்வுக்கான சிறப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் நூலகத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி முகாமை கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா்.
நாமக்கல் சிவிக்ஸ் அகாதெமியின் நிா்வாக இயக்குநா் தினேஷ் பழனியப்பன் பங்கேற்று, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை மாணவா்கள் எழுதும் முறைகள், தோ்வுக்கு திட்டமிடல், பொது அறிவு நூல்களை கற்றல், தொடா் பயிற்சி முறைகள் குறித்த கருத்துரைகளை வழங்கினாா். இதில், கல்லூரி நூலகா் கி.ச.கல்யாணி, பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...