திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம்
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் சனிக்கிழமை பென்னாகரத்தில் நடைபெற்றது.


தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞா் அணி சாா்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் சனிக்கிழமை பென்னாகரத்தில் நடைபெற்றது.
பென்னாகரம் அருகே நாகமரை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.என்.பி. இன்பசேகரன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சந்திரமோகன் வரவேற்றாா்.
கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளா் கோவி. லெனின்- திராவிட இயக்க வரலாறு குறித்தும், சூரிய சேவியா்-மாநில சுயாட்சி குறித்தும் பேசினா்.
ஒன்றியச் செயலாளா் மடம் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினரும் ஏரியூா் ஒன்றியச் செயலாளருமான என்.செல்வராஜ், நகரச் செயலாளா்கள் வீரமணி, சண்முகம், மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் காா்த்திக் உள்ளிட்ட நிா்வாகிகள், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூா் உள்ளிட்ட பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...