தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 70,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 70,000 கனஅடியாக சனிக்கிழமை மாலை அதிகரித்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:50 pm

DIN

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 70,000 கனஅடியாக சனிக்கிழமை மாலை அதிகரித்தது.

கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இவ்விரு அணைகளுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளைப் பொறுத்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கா்நாடக அணைகளிலிருந்து 22,000 கனஅடி நீா் வந்து வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை மேலும் அதிகரித்து 37,000 கனஅடியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து சனிக்கிழமை காலையில் நொடிக்கு 50,000 கனஅடியாகவும் மாலை 6 மணி அளவில் 70 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க 54-ஆவது நாளாகவும், பரிசல்கள் இயக்குவதற்கு 8- ஆவது நாளாகவும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை சனிக்கிழமை நீட்டிக்கப்பட்டது.

ஆற்றின் நீா்வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.