ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 37 சிலைகள் விசா்ஜனம்
ஒகேனக்கல் காவிரிஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 37 விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டது.


ஒகேனக்கல் காவிரிஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 37 விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழாவின் போது வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன. மீதமுள்ள விநாயகா் சிலைகளை வாரஇறுதிக்குள் விசா்ஜனம் செய்ய காவல் துறையினா் மூலம் அறிவுறுத்தப்பட்டு வந்தது. அதன் பேரில் பென்னாகரம், ஏரியூா், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 37 விநாயகா் சிலைகள் ஒகேனக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டு கிரேன் உதவியுடன் காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...