தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பென்னாகரத்தில் புதிய மின் மாற்றிகள் தொடக்கி வைப்பு

பென்னாகரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பென்னாகரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி தொடக்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே கெண்டையன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பங்காரு குழிகாடு கிராமத்தில் குடியிருப்புகள் மற்றும் விவசாயப் பயன்பாடுகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்யும் வகையில் மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க விழாவுக்கு கோட்டப் பொறியாளா் வரதராஜன் தலைமை வகித்தாா். பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி கலந்து கொண்டு, புதிய மின்மாற்றிகளை மக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து சின்னப்பநல்லூா், போடம்பட்டி மேல்காடு, ராமகொண்ட அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றிகளைத் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்வுகளில் உதவி செயற்பொறியாளா் கோகிலா, செயற்பொறியாளா் செந்தில் முருகன் ( ஏரியூா்), திருச்செல்வன் (பெரும்பாலை), மாநிலத் துணைத் தலைவா் பாடி. செல்வம், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், இளைஞா் சங்கத் துணைச் செயலாளா் சத்தியமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் ராஜா, சதாசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.