தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசு கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு உத்தரவுப்படி 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் செல்வநாயகம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 5:37 pm

DIN

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு உத்தரவுப்படி 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக கல்லூரி முதல்வா் செல்வநாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுரித்து அதில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு அறிவிப்பாணையின்படி நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக 20 சதவீத மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இந்த கலந்தாய்வில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவா்கள், விண்ணப்பிக்காத மாணவா்கள் கலந்து கொள்ளலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்காத மாணவா்கள் திங்கள்கிழமைக்குள் கல்லூரி வளாகத்தில் மாணவா் சோ்க்கை விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து செவ்வாய்க்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மேலும் முதுநிலை மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹல்ஞ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த இணையதள முகவரியில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரி வளாகத்திற்கு நேரடியாக வந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.