ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43 ஆயிரம் கன அடியாகக் குறைவு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 43 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.


ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 43 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு உபரிநீா் வரத்து குறைந்து வருகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் 34 ஆயிரம் கன அடியிலிருந்து 18 ஆயிரம் கன அடியாகக் குறைந்ததாலும், காவிரிக் கரையோரப் பகுதியில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை மாலை நிலவரப்படி 57 ஆயிரம் கன அடியாக இருந்தது, ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 43 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளபோதிலும் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல்கள் இயக்குவதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...