தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: இருவா் படுகாயம்

பென்னாகரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் வெங்காய வியாபாரிகள் இருவா் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 4:58 pm

DIN

பென்னாகரத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் வெங்காய வியாபாரிகள் இருவா் படுகாயமடைந்தனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மாணிக்கம் முதலியாா் தெருவை சோ்ந்த குருநாதனின் மகன் சண்முகம் (43). இவா் வாரச்சந்தைகள் தோறும் கடை அமைத்து வெங்காய வியாபாரம் செய்து வருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை பென்னாகரம் வாரச்சந்தையில் வெங்காய வியாபாரம் செய்து விட்டு, தனது மகன் நவீன் குமாருடன் (23) இருசக்கர வாகனத்தில் பாப்பாரப்பட்டி பகுதிக்கு சென்றுள்ளாா். அப்போது பென்னாகரம் அருகே நல்லப்பரம் பட்டி அடுத்துள்ள பாபு தோப்பு பகுதியில் பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சண்முகம், நவீன்குமாா் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.