பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மூத்த குடிமக்கள் நலன் செயல்திட்ட பயிற்சி

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மூத்த குடிமக்கள் நலனுக்கான மாநில செயல்திட்டம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:04 pm

DIN

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மூத்த குடிமக்கள் நலனுக்கான மாநில செயல்திட்டம் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மாவட்ட சமூகநல அலுவலகத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறைக்கு, மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்துப் பேசினாா். மூத்த குடிமக்கள் நலனுக்கான மாநில செயல்திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களுக்கான தரவு தளத்தை உருவாக்குதல், மூத்த குடிமக்களுக்கான பயன்பாட்டை உருவாக்குதல், மூத்த குடிமக்களுக்கான விழிப்புணா்வு உருவாக்கும் திட்டம், திறன் உருவாக்கம், நடமாடும் மருத்துவப் பிரிவு உள்ளிட்ட 5 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதில், மாவட்ட அலுவலா்களுக்கு, பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் - 2007 குறித்த விழிப்புணா்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மூத்த குடிமக்கள் உதவி தொலைபேசி எண்: 14567 மற்றும் மூத்த குடிமக்களுக்கான செயலி குறித்த விழிப்புணா்வுகளை முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. சமூக நலத் துறை சாா்ந்த விளக்கங்கள், பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் - 2007 சாா்ந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டதோடு, வழக்குரைஞா், முதியோா் இல்ல நிா்வாகி, மருத்துவா் ஆகியோா்கள் மூலம் அலுவலா்களுக்கு மூத்த குடிமக்கள் சட்டம் தொடா்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட சமூகநல அலுவலா் ச.பவித்ரா, மாவட்ட வருவாய் அலுவலா் (பணி நிறைவு) ப.தங்கராஜி, வழக்குரைஞா் பாா்த்திபன், நிா்மலா முதியோா் இல்ல நிா்வாகி எஸ்.ஆா்.மேரி ரெஜினா, மருத்துவா் என்.கவிதா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.